முட்டை சாப்ஸ்

4 servings
10 Minutes to prepare
20 Minutes to cook

INGREDIENTS

 • 1. முட்டை 4-5
 • 2. பெரிய வெங்காயம் 2
 • 3. பழுத்த தக்காளி 2
 • 4. வரமிளகாய் 6-8
 • 5. சீரகம் 1 தேக்கரண்டி
 • 6. மிளகு 1 தேக்கரண்டி
 • 7. உப்பு தேவையானஅளவு
 • 8. கறிவேப்பிலை சிறிது
 • 9. எண்ணெய் 2 தேக்கரண்டி
 • 10. கடுகு 1 தேக்கரண்டி
 • 11. உளுந்து 1 தேக்கரண்டி

PREPARATION

1. முட்டைகளை வேக வைத்து ஓடு உரித்து கொள்ளவும்

2. வெங்காயம், தக்காளியை ஒன்றிரண்டாக வெட்டிக் கொள்ளவும்

3. ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வரமிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை சிறிது சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்

4. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

5. தேவையான உப்பு சேர்க்கவும்

6. வேக வைத்து ஓடு உரித்த முட்டைகளை உடையாமல் கீறி குழம்பில் சேர்க்கவும்

7. மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் கொதி விடவும்

8. சூடான சாதத்துடன் பரிமாறவும்

9. இது என் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்ட சட்டென செய்யக்கூடிய சுவையான எளிய உணவாகும்.

Upload Your Recipe